Skip to content

எங்கள் மையம் · திண்டுக்கல்

தங்கஜம் முன்றில்

வேலை பயிற்சி · வேலை வாய்ப்பு · தொழில் உத்திகள் · விளம்பர சேவைகள் · உடல் நலன்

தங்கஜம் முன்றில் என்றால் என்ன? எங்கு இருக்கிறது? என்ன வேலை செய்கிறது? எவ்வாறு வேலை செய்யும்? எப்படி அடையாளம் காண்பது? — சிறப்பு நன்றி. கேள்வி பெருசா போய்ட்டு இருக்கு, சொன்னா பதிலும் பெருசா போய்டும், படிக்கிறவங்களுக்கு சலிப்பு தட்டிடும். அதன் காரணமாக சுருக்கமாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. வலை தளங்களில் சற்று விவரமாகவும் விளக்கமாகவும் இருக்கும்; கீழே இணைய வழி முகவரிகள் கொடுக்கப்பட்டிருக்கும் — அவற்றில் படித்து மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

தங்கஜம் முன்றில் என்றால் என்ன?

தங்கஜம் என்பதில் கஜம் என்பது கஜமுகனாகிய விநாயகரைக் குறிக்கும். முன்றில் என்பதற்கு வீட்டின் முன்பகுதி விசாலமாக அமையப்பெற்ற இடம் என்று அர்த்தம்.

ஆக தங்கஜம் முன்றில் என்பதில் கஜமுகனாகிய விநாயகர் தங்கி, வீட்டில் விசாலமாக அமையப்பெற்ற முன் வழியில் வருவோருக்கு விசாலமான அறிவு, ஆற்றல், மனநிறைவு, உடல் நலம், செல்வ வளம் ஆகியவற்றைத் தன் ஐந்து கரங்களில் இருந்து வழங்கி அருள் புரிய வேண்டும் என்ற நோக்கத்தில் வைக்கப்பட்ட பெயராகும். இது ஒரு அலுவலகக் காரணப் பெயர்.

பாரம்பரியம் மற்றும் தொழில் முறைகள் சம்பந்தமாக தங்கஜம் முன்றில் என இவ்விடம் அழைக்கப்படுகிறது.

தங்கஜம் முன்றில் எங்கு இருக்கிறது?

முகவரி

சீலப்பாடி போலீஸ் குடியிருப்பு அருகில்,
ஆதவன் தெரு, ஸ்ரீ அன்னை அபிராமி நகர்,
NH-45, திருச்சி → திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை,
திண்டுக்கல் – 624005.
கூகிள் மேப்பில் காண்க
தங்கஜம் முன்றில் அமைவிடம்

ஐந்து விதமான வேலைகள்

தங்கஜம் முன்றில் என்ன வேலை செய்கிறது?

என்னங்க இப்படி கேட்டுட்டீங்க! பெயரை இவ்வளவு BROAD MINDஆ வச்சு விட்டுட்டு, ஒரு வேலை மட்டும் செய்தால் எப்டிங்க இவ்விடத்தில் சிறப்பாகும்? அதனால் ஐந்துகரத்தின் ஆசியோடு! உங்களைப் போன்ற நலன் விரும்பிகளின் துணையோடு! செய்தொழிலில் இதற்கு முன் கற்ற, பெற்ற மதிப்பு மற்றும் தரம் ஆகியவை மாறாமல் பின்பற்றி, கீழ்காணும் ஐந்து விதமான வேலைகளை தங்கஜம் முன்றில் மூலமாக உரிய அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்கிறோம்.

01

fueint.com

COACHING CENTRE (FUEiNT SOFTWARE SOLUTIONS)

இங்கு FUEiNT SOFTWARE SOLUTIONS எனப்படும் IT நிறுவனத்தின் சார்பில் WEB DEVELOPMENT COACHING CENTRE ஆக செயல்படுகிறது. இதன் மூலம் பட்டப்படிப்பு முடித்த ஆண் / பெண் இருபாலரும் WEB DEVELOPER ஆகக்கூடிய வாய்ப்பினை உருவாக்கி கொடுக்கிறது. மேலும் விவரங்களை www.fueint.com என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

02

fueint.com

JOB ASSURANCE

இங்கு பயிற்சி பெறும் நபர்கள் வேலை வாய்ப்பு தேடி எங்கும் செல்லத் தேவையில்லை. இவர்களின் IT COMPANYல் இவர்களே வேலை செய்ய வாய்ப்பு கொடுக்கிறார்கள். வெளி மாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை செய்ய விருப்பம் எனும் பட்சத்தில் அதற்கான வழிகாட்டுதல்களும் வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தருகிறார்கள்.

03

ugosay.com

DIGITAL MARKETING (UGOSAY)

இங்கு UGOSAY எனப்படும் கம்பெனி சார்பில் BUSINESS PROMOTIONAL ACTIVITY எனப்படும் விளம்பரங்கள் சமூக ஊடகங்கள் வழியாக செய்துதரப் படுகிறது. இதனைப் பற்றிய விவரங்களை www.ugosay.com என்ற தளத்தில் காணலாம்.

04

YiTiY BUSINESS STRATEGY

இங்கு அனைத்து விதமான தொழில் மற்றும் தொழில் இடம் சம்பந்தப்பட்ட இடர்பாடுகள் / இடையூறுகள் இருந்தால், தொழில் நிலைபெற அனைத்து விஷயங்களிலும் உங்களைத் தயார் படுத்தி உங்களின் வியாபார வலிமையின் மூலம் உங்களின் இலட்சியத்தை / இலக்கினை அடைய வைப்பது என்பதை ஈட்டி தொழில் உத்தி வேலையாகச் செய்கிறது.

05

KiLiK MANUAL THERAPY

இங்கு மனிதருக்கு ஏற்படக்கூடிய நாடி, நரம்பு, தசை, எலும்பு, மூட்டுகள், உயிர் இனப்பெருக்கம் (குழந்தை), உணர்வுகள், மனம், சுவாசம், சுரப்பிகள், தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தொன்றுதொட்டு உலக அளவில் இன்றுவரை கடைபிடிக்கப்படும் கைமுறை சிகிச்சைகளின் அடிப்படையில் உடலில் அழுத்தம் கொடுப்பது, உடலினைத் தூண்டுவது மற்றும் உடலைப் பற்றிய பாரம்பரிய மரபுவழி முறையில் திருப்புவது போன்ற சிகிச்சை கைகளால் சரியாகச் செய்யப்படுகிறது. கிளிக் கை சிகிச்சை முறையானது மக்களின் உடல், மனத் தேவைக்கு ஏற்ப மாறுபடும். நலமுடன் உடலை இயல்பான வளையும் தன்மைக்கு கொண்டு வர சிறு அளவிலான எளிய உடற்பயிற்சி முறையும் பழகிக்கொள்ளலாம். கிளிக் சிகிச்சையில் குணமாக கைவினை / கைவிசை செயல்கள் மட்டும் கடைபிடிக்கப்படும், அதனால் பயமுறுத்தும் பக்க விளைவு இல்லை!

தங்கஜம் முன்றில் எவ்வாறு வேலை செய்யும்?

சான்றோர்கள் உலகின் செயல் ஆதார கோட்பாடுகளான கைபாகம், செய்பாகம் ஆகிய இரண்டுமே எங்களின் வேலை / சேவை / தொழில் செய்கை அடிப்படை. அதன்படி களத்திலும், கருத்திலும் சுய ஈடுபாடு மற்றும் பொதுநலன் சார்ந்திட பயணிப்பது எங்களின் அன்றாடப் பணி நடைமுறையாகும்.

தங்கஜம் முன்றில் எப்படி அடையாளம் காண்பது?

ராஜபாளையம் மற்றும் சிப்பிப்பாறை என்னும் நமது பாரம்பரிய நாட்டு இன நாய்கள் தற்சமயம் காவலில் இருக்கும். மேலும் நீங்கள் கூகிள் மேப் பார்த்து கண்டறிவதும் சுலபம். தங்கஜம் முன்றில் — வேலைக்கான பயிற்சி, வேலைவாய்ப்பு, தொழில் மேம்பட விளம்பரம், தொழில் வெற்றிபெற உத்திகள், உடல் நலன் மேம்பாடு போன்ற வேலைகளை சரிவர செய்து கொடுக்கக் கூடிய ஓரிடமாக திண்டுக்கல்லில் இருக்கிறது.

Ready to begin your healing journey?

Sessions are held at Thangajam Munril, our multidisciplinary centre in Dindigul, guided by trained KiLiK therapists.

Visit the centre